Saturday, June 15, 2013

Kumbhabishegam for 10 Temples in Navamaalmaruthur, Kandamangalam

நவமால்மருதூரில் ஒரே நாளில் 10 கோயில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நேரம்: 2013-06-14 11:26:45

வில்லியனூர்:  கண்டமங்கலம் அடுத்துள்ள நவமால்மருதூரில் 1000 ஆண்டுகள் பழமை யான மருதீஸ்வரர் சிவன் கோயிலும், ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளிட்ட பத்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. 

விழுப்புரம் மாவட் டம் நவமால் மருதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமருதீஸ்வரர், ஸ்ரீகல்யாண வெங்கடேசபெருமாள், ஸ்ரீதிரவு பதி அம்மன், ஸ்ரீமுத்து மாரியம்மன், ஸ்ரீவிஷ்ணுகாளியம்மன், ஸ்ரீநாகேந்திரன் சுவாமி, ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன், ஸ்ரீபுரையாத்தமன், ஸ்ரீஐயனாரப்பன், ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீபாலமுருகன் உள் ளிட்ட 10 கோயில்களுக்கு நல்லப்பன் நீல் கண்ட சிவா தலைமையில் ஒரே நாளில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக கடந்த 7ம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 8ம் தேதி கலச புஜையும், நவகிரக ஹோமமும், 9ம் தேதி ருத்ரஹோமம் மற்றும் நெய்வேத்தியமும், 10ம் தேதி சுதர்சனஹோமம் மற்றும் தீபா ராதனையும், 11ம் தேதி சண்டி ஹோமம், நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் பத்து கோயில்களுக்கும் அடுத்தடுத்து மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக் கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பத்து கோயில்களுக்கான திருப்பணிகள், சுவாமி சிலைகள், கும்பாபிஷேகத்திற்கான பூஜை பொருட்கள், யாக பொருட்கள், யந்திர தகடுகள், ஐயர் சம்பாவனை, அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் என அனைத்து வித செலவுகளும் ஜோதிடர்  நல்லப்பன் நீல்கண்ட சிவா செய்தார்.

Courtesy_

Also read the related stories

நவமால்மருத்தூரில் 12 கோவில்களில் கும்பாபிஷேகம் 12–ந் தேதி நடக்கிறது

பதிவு செய்த நாள்: Jun 09 | 07:59 pm

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை உடனுறை மருதாஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி–பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், திரவுபதி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், விஷ்ணு காளியம்மன் கோவில், நாகேந்திர சுவாமிகோவில், எல்லை பிடாரியம்மன் கோவில், புரையாத்தம்மன் கோவில், அய்யனாரப்பன் கோவில், சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், பாலமுருகன் கோவில் ஆகிய 12 கோவில்கள் புதியதாக கட்டப்பட்டு உள்ளன.

அதைத்தொடர்ந்து இந்த கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற 12–ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக கடந்த 7–ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 8–ந் தேதி கலச பிரதஷ்டை, நவக்கிரக பூஜையும், நேற்று இந்திராதி அஸ்டதிக் பாலக பூஜை, ருத்ரஹோமம் நடந்தது. 

இன்று (திங்கட்கிழமை) சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமமும், நாளை (செவ்வாய்க்கிழமை) விஷ்ணு சகஸ்ரநாமம், பாராயணம், சண்டி ஹோமம், பூர்ணாஹூதி உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Courtesy_

துறவுரை


This Blog Spot is meant for publishing Spiritual and Devotional Postings as we collected from the renowned Dailies, Magazines, etc., so as to keep it as a ready reckoner by the Devotees. As such the readers may extend their gratitude towards the Author as we quoted at the bottom of each Post under the title "Courtesy".



முதன்மை நாட்கள்

கோயிலை பற்றி சில வரிகள்...


Marudheeswarar Temple was built during the period of CHOLAS' (SOZHARGAL) dynasty by RAJENDRA CHOZHAN, KULOTHUNGA SOZHAN-I 1200 years ago. KULOTHUNGA SOZHAN-I had built 77 temples during his life time. This temple is one among them. The Sculptures are 1200 years old as per the design, it has been sculpted. SHRI APPAR, one among the top four NAYANARs, has worshiped this Temple. Temple is located in NAVAMAL MARUTHOOR (Navam – Nine, Aal – Temple, Marutham – Land Suitable For Agriculture, Oor – Place). Place where 9 temples are located, also suitable for agriculture. Lord SHIVA is devotionally called as MARUDHEESWARAR. Maa PAARVATHY is devotionally called as MARUDHAAMBIGAI. So, named MADHEESWARAR UDANURAI MARUDHAAMBIGAI THIRUKOIL. It is believed that Lord SHIVA was raised as ARJUN TREE (MARUDHA MARAM). SHRI PARAGESI MUNIVAR, a saint who CONSECRATED this Temple. This Temple was built during the period of TANJAVUR PERIYA KOIL, GANGAI KONDA SOZHAPURAM, THIRUVANNAMALAI ANNAMALAYAR TEMPLE. This Temple has been entirely built with BLACK ROCK, where the rock is available only 40 miles (64 km) away from here. Lord SHIVA and Maa PAARVATHY flowing their GRACE towards the EASTERN side. Also all the GODs like VINAYAGAR, MURUGAN facing the EAST. CHANDHIRAN (MOON), SOORIYAN (SUN) and KAALA BHAIRAVAR worshiping Lord SHIVA and Maa PAARVATHI everyday. Also KAALA BHAIRAVAR is the Guardianship of this Temple. CHANDIRA – SOORIYA ABISHEGAM (MOON – SUN ANOINTMENT) is being done everyday. Lord SHIVA and Maa PAARVATHI here worshiped as FATHER and MOTHER (THANTHAIYUMAANAVAR - THAAYUMANAVAR), where the PEDESTAL (PEEDAM) is in equal height. The Entrance of Temple is in SOUTHERN side, which is significant to PLANET MERCURY (BUTHAN). The Temple Pond is located just in front of the temple, which is 7 acres. Lord SHIVA's vision is towards the POND (THADAGA PAARVAI) (Thadagam - Water). This Temple is significant for ATONEMENT (PARIGAARAM). Also to cure diseases. We can FEEL the VIBRATION, if we sit for a while. As per records 1056 AD, Temple had 66 acres of Land. Inscription (Epigraph) about the Temple is seen in KARANTHAI (TANJAVUR Dt). At Present, the Temple is undergoing renovation and also works are going for the construction of RAJA GOPURAM.


On 12-06-2013 Kumbabhishekam performed for this historical Temple.